ஒருவரின் மரணத்திற்கு காரணமான ஓட்டுனருக்கு நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
144Shares
144Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை விபத்தில் ஒருவரின் மரணத்திற்கு காரணமான கார் ஓட்டுனரை சிறைக்கு அனுப்பாமல் அந்நாட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Neuchatel மாகாணத்தில் உள்ள La Chaux-de-Fonds என்ற நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தற்போது 26 வயதான வாலிபர் ஒருவர் காரை ஓட்டிச்சென்றுள்ளார்.

கார் ஓட்டியபோது அவர் தனது செல்போனில் குறும்செய்தியை அனுப்பியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், கார் ஓட்டிக்கொண்டு செல்போன் மூலமாக ஓன்லை ஷொப்பிங் செய்து அதற்கான பணத்தையும் செலுத்தியுள்ளார்.

செல்போனில் அவரது கவனம் முழுவதும் இருந்ததன் விளைவாக சாலையில் சென்றுக்கொண்டு இருந்த இரண்டு சக்கர வாகனம் மீது கார் மோதியுள்ளது.

இவ்விபத்தில் 50 வயதான நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கின் இறுதி வாதம் நீதிமன்றத்திற்கு வந்தபோது கார் ஓட்டுனருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என வழக்கறிஞர் வாதிட்டுளார்.

’கார் ஓட்டியபோது செல்போனை பயன்படுத்தியது தவறு தான். எனது செயலுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

ஆனால், இதனால் ஒருவரின் உயிர் பறிக்கப்படும் என்பதை நான் சிந்தக்கவே இல்லை’ என கார் ஓட்டுனர் நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

ஓட்டுனரின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ‘ஓட்டுனரின் செயலால் ஒருவரின் உயிர் பறிப்போகும் என்பதை அவர் அறிந்திக்கவில்லை.

எனவே, ஓட்டுனருக்கு 14 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையை மட்டுமே வழங்குவதாக’ நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்