சுவிட்சர்லாந்து Ticinoவில் முதன்முறையாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
262Shares
262Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக Ticino மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Ticino மாகாண நாடாளுமன்றத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பான மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி ஒருவருக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் 3,372 பிராங்குகளிலிருந்து 3,462 பிராங்குகள் வரை வழங்கப்படும், இது ஒரு மணிநேரத்திற்கு 20 பிராங்குகள் என்பதற்கு சமமாகும்.

எனினும் நிதியமைச்சர் Christian Vitta கொண்டு வந்துள்ள இந்த மசோதாவிற்கு உலக அளவில் வரவேற்பு கிடைக்காது.

ஏனெனில் உலகிலேயே வாழ்வதற்கு அதிக பணம் தேவைப்படும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாக இருப்பதால் இந்த குறைந்தபட்ச ஊதியம் போதாது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன்பாக கடந்த 2014ஆம் ஆண்டு மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக 4,000 பிராங்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று மசோதா கொண்டுவரப்பட்ட போது தோல்வியடைந்தது.

மேலும் இது பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் என வாக்களித்தவர்கள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் வருடங்கள் கடந்து போக சுவிசின் பல மாகாணங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்