பள்ளியில் மது போதையில் பாடம் நடத்திய ஆசிரியை பணி நீக்கம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
259Shares
259Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் ஆசிரியை ஒருவர் மது அருந்திவிட்டு வகுப்பில் பாடம் எடுத்த குற்றத்திற்காக அவர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Schwyz மாகாணத்தில் உள்ள Einsiedeln பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நகரில் உள்ள Schulhaus Bruel பள்ளி ஒன்றில் பெண் ஒருவர் தற்காலிக ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று ஆசிரியை மது அருந்திவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர், அன்றைய தினம் எடுக்க வேண்டிய பாடத்திற்கு பதிலாக தவறுதலாக மற்றொரு பாடத்தை நடத்தியுள்ளார்.

வியப்படைந்த மாணவர்கள் ‘நீங்கள் தவறான பாடத்தை எடுக்கறீர்கள்’ என உணர்த்தியுள்ளனர். மாணவர்களின் பதிலால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அனைவரையும் மோசமாக திட்டியுள்ளார்.

ஆசிரியையின் நடவடிக்கையால் வருத்தம் அடைந்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர் உடனடியாக மருத்துவ குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால், மருத்துவர்களுக்கு ஆசிரியை ஒத்துழைப்பு அளிக்காததால் பின்னர் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

ஆசிரியை அழைத்துச்சென்ற பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆசிரியையின் செயலுக்கு பள்ளி நிர்வாகத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பள்ளியில் ஒழுக்கம் தவறி நடந்தக்கொண்ட ஆசிரியை நிரந்தரமாக பணி நீக்கம் செய்வதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்