ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு: கொலையா? தற்கொலையா?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
468Shares
468Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் வேலை கிடைத்ததால் தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

உட்டா மாகாணத்தில் உள்ள Mapleton என்ற நகரில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பொலிசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, வீட்டிற்குள் தந்தையும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக கிடந்துள்ளனர். அருகில் அவரது மனைவியின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் மனைவி அமெரிக்காவை சேர்ந்தவரா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனரா? அல்லது இதற்கு பின்னணியில் குற்றச்செயல்கள் உள்ளதா? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டு தூதரக உதவியுடன் அமெரிக்க பொலிசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்