மாரடைப்பால் துடித்த பெண்: ஆம்புலன்ஸை அழைத்தபோது நிகழ்ந்த விபரீதம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
497Shares
497Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் ஒருவரு உயிருக்கு போராடியபோது சுமார் 50 நிமிடங்களுக்கு பின்னர் ஆம்புலன்ஸ் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் உரி மாகாணத்தில் உள்ள Altdorf என்ற நகரில் தம்பதி இருவர் வசித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் மனைவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் தனது குடும்ப மருத்துவருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலை பெற்ற மருத்துவர் ஆம்புலன்ஸ் சேவைக்காக பிற்பகல் 12.02 மணியளவில் தகவல் அளித்துள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியுள்ளது.

போக்குவரத்து சீரானதும் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக ஆம்புலன்ஸ் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மருத்துவர்கள் பேசியபோது ‘ஆம்புலன்ஸ் மிகவும் தாமதாக வருவது அரிதாகவே நிகழும்.

ஆனால், மருத்துவமனைக்கும் பெண்ணின் வீட்டிற்கும் இடையே ஒரு கி,மீ தூரம் மட்டுமே இருந்துள்ளது.

மிகவும் அரிதான நேரங்களில் மட்டுமே மாரடைப்பு ஏற்ப்பட்டவர்கள் தாமதமாக வந்தவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்