சுவிஸில் போக்குவரத்திற்கு கணிசமானதடை

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து
188Shares
188Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் வார இறுதியில் மழை, உயர் காற்றழுத்தம் மற்றும் பனிப்பொழிவால்சாலைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு கணிசமான தடை ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கு 143 கிமீ வரைகாற்று வீசியுள்ளது, 400-700 மீற்றருக்கும்அதிகமான மழை பெய்தது, வடக்கு சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் 30-50 செ.மீ. பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

ஜெனிவா விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைமதியம் மூன்று மணிநேரங்கள் விமானம் தாமதமாக புறப்பட்டுள்ளது. பத்து விமானங்கள் திசை திருப்பப்பட்டன மற்றும் மூன்றுரத்து செய்யப்பட்டுள்ளன.

கடுமையான மழை மற்றும் மரங்கள்விழுந்த காரணத்தினால் சாலைப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமைகளில் சில நேரங்களில் அதிக காற்றழுத்தம் இருந்தது, ஆனால் வானிலை இந்த வாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறதுஎன வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்