சுவிஸ்வாசிகள் வருமானத்தை அதிகம் எதற்கு செலவு செய்கிறார்கள் தெரியுமா?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
558Shares
558Shares
ibctamil.com

சுவிஸ்வாசிகள் தங்கள் வருமானத்தில் மாதம் எந்த விடயங்களுக்கு அதிகளவில் செலவு செய்கிறார்கள் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

2015-க்கான கணக்குகளை சுவிஸ் பெடரல் புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி வருமான வரி கட்டியதன் போக சராசரியாக சுவிஸ் மக்கள் கையில் மாதம் $7,007 வீட்டு வருமானம் இருந்துள்ளது.

இதில், வீட்டு தேவைகள் மற்றும் அது சம்மந்தமான விடயங்களுக்காகவே அதிக பணத்தை சுவிஸ் மக்கள் கடந்த 2015-ல் செலவு செய்துள்ளனர்.

சராசரியாக 14.7% இதற்காக செலவிட்டுள்ளார்கள், இது சுவிஸ் பிராங்க் எண்ணிக்கையில் 1,458 ஆகும்.

அடுத்ததாக பல விதமான அரசு வரிகள் கட்ட 1208 பிராங்குகள் செலவிடுகிறார்கள்.

சமூக காப்பீடுக்கு 976 பிராங்குகளும், போக்குவரத்துக்கு 759 பிராங்குகளும் சுவிஸ்வாசிகள் செலவு செய்துள்ளார்கள்.

ஹொட்டல் உணவுகளுக்கு 571 பிராங்குகளும், சினிமா, அருங்காட்சியகம் போன்ற ஓய்வு விடயங்களுக்கு 557 பிராங்குகள் செலவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.


மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்