பேர்ண் மாநிலத்தில் பெண்களுக்கான தகவல்களை வழங்கும் கலந்துரையாடல்

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து
139Shares
139Shares
lankasrimarket.com

பெண்களுக்கான கலந்துரையாடல் என்பது சுவிஸ் நாட்டில் வாழும் அனைத்து பெண்களும் தமது நாளாந்த வாழ்க்கையில் சுயமாக, தன்னிச்சையாக செயற்பட வேண்டும் என சுவிசுநாட்டு அரசாங்கத்தினால் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும்.

இக் கலந்துரையாடலில் சுவிசுநாடு தொடர்பாக நாளாந்த வாழ்க்கைக்குத் தேவையான புதிது புதிதாக வரும் விடயங்கள் பற்றி கலந்துரையாடப்படும்.எடுத்துக்காட்டாக சுவிஸ் நாட்டின் கல்விமுறை மருத்துவமுறைகள் பாடசாலைகளில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்றவையாகும்.

பேர்ண் மாநிலத்தில் இன்று பெண்களுக்கான கலந்துரையாடல்களுக்கு (Femmes Tische) பொறுப்பான வழிநடத்துனர்களுக்கான ((Moderatorinnen) கலந்துரையாடலும் கற்கைநெறியும் (Campus Muri Stalden) என்னும் இடத்தில் நடைபெற்றது.

இதில் சுவிஸ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெண்களின் கலந்துரையாடலுக்கான தகவல்களை வழங்கும் வழிநடத்துனர்கள் கலந்துகொண்டார்கள்.

15 மொழிகளைப் பேசும் ஏறக்குறைய 250 மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டார்கள். இக் கலந்துரையாடலில் காலை 9.00 மணிமுதல் மாலை 17.00 வரை விருந்தோம்பல் மிக சிறப்பாக நடைபெற்றது. பங்குபற்றிய

அனைவருக்கும் மதிய உணவாக பசுமதி சோறும், சைவக்கூட்டும் வழங்கப்பட்டது.

பேர்ண் மாவட்டத்திற்கு பொறுப்பாகக் கடமையாற்றுபவர் (Frau Stephanie), Schar, Zentrumlteiterin. பேர்ண் மாவட்டத்திற்கு தமிழ் மொழிக்குப் பொறுப்பாக கடமையாற்றுபவர் இணையர் நந்தினி முருகவேள்.

பேர்ண் நகரப்பகுதியில் பெண்களுக்கான தகவல்களை வழங்கும் கலந்துரையாடலை இவர் மேற்கொண்டு வருகின்றார்.

இன்று நடைபெற்ற இக் கலந்துரையாடலில்(National Moderatorinnene Weirterbildung) இணையர் நந்தினி முருகவேள் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் சுவிஸ் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் வாழும் தமிழ்ப்பெண்கள் இவ்வாறான கலந்துரையாடல்களுக்குச் செல்வதன் மூலம் தமது நாளாந்த வாழ்க்கையை இலகுவாக்க முடியும் எனக் கூறினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்