தீவிரவாத இயக்கத்துக்கு நிதியுதவி: இரண்டு பெண்கள் உட்பட மூவரிடம் விசாரணை

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

தீவிரவாத இயக்கத்துக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் மூவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்த செய்தியை சுவிஸ் பத்திரிக்கை NZZamSonntag வெளியிட்டுள்ளது.

சுவிஸின் அட்டர்னி ஜெனரல் சட்ட இணைப்பு அலுவலகம் தெரிவிக்கையில், ஐ.எஸ் (Islamic State) என்ற தீவிரவாத இயக்கத்துக்கு மூவரும் நிதியுதவி அளித்திருக்கலாம் என கூறியுள்ளது.

இது சம்மந்தமான வழக்கு கடந்த மார்ச் மாதம் மூவர் மீதும் தொடங்கப்பட்டது. மூவரில் உள்ள இரண்டு பெண்களும் சகோதரிகள் ஆவார்கள்.

Vaud மண்டலத்தை சேர்ந்த அவர்களில் ஒருவர் $6,400 பணத்தையும், இன்னொருவர் $630 பணத்தையும் இடைத்தரகர் மூலம் சிரியாவுக்கு சென்று தீவிரவாத இயக்கத்துக்கு கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மூன்றாவது நபரான ஆண் இரண்டு பெண்களில் ஒருவரின் கணவராவார். தம்பதியின் மகனான சிறுவனிடம் கடந்த 2016-லிருந்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுவன் தீவிரவாத இயக்கத்தில் சேர திட்டமிட்டது சம்மந்தமாக விசாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்