காயங்களுடன் நெடுஞ்சாலையில் படுத்துகிடந்த 17 வயது சிறுவன்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

விபத்தில் அடிப்பட்டு நெடுச்சாலையில் படுத்துகிடந்த சிறுவனை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்த நிலையில் அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மற்றும் லாசன்னே நகருக்கு இடையிலான ஏ1 நெடுஞ்சாலையில் அந்நாட்டு நேரப்படி விடிகாலை 3.45 மணிக்கு நபர் ஒருவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் காயங்களுடன் படுத்து கிடந்த 17 வயது சிறுவனை பார்த்த அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அவசர உதவி எண்ணுக்கு போன் செய்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ ஊழியர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறுவனின் கணுக்கால் மற்றும் மணிக்கட்டு உடைந்து போயுள்ளது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் கண்ணாடி துண்டுகள் இருந்துள்ளன. இதையடுத்து சாலையில் சென்ற வாகனம் சிறுவன் மீது மோதியிருக்கலாம் என கருதும் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்