70,000 பிராங்குகளுடன் சுவிசில் வசிக்கலாம்! உண்மை நிலவரம் என்ன?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
356Shares
356Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் உள்ள கிராமம் ஒன்றில் 70,000 பிராங்குகள் நிதி உதவியுடன் குடியிருக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதின் உண்மை நிலை குறித்து அந்த கிராம நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக அளவில் பல்வேறு பத்திரிகையில் முக்கியச் செய்தியாக வலம் வந்தது சுவிட்சர்லாந்தின் Albinen கிராமம்.

இங்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் வசிப்போருக்கு 70,000 பிராங்குகள் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிப்பு ஒன்று வெளியாகி உலகின் பல்வெறு பகுதிகளில் இருந்தும் மேலதிக தகவல் கேட்டு விசாரணை குவிந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த கிராமத்தின் நிர்வாகிகள், வெளியான விளம்பரம் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.

அதில், தொடர்புடைய திட்டமானது பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதில் வெற்றி பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டுமின்றி குறித்த விளம்பரத்தை தவறாக புரிந்து கொண்டு ஏராளமான விசாரிப்புகள் குவிந்து வருவதாகவும், ஆனால் அந்த விளம்பரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு மட்டுமே 70,000 பிராங்குகள் வழங்கப்படும் எனவும், குறைந்தபட்சம் 200,000 பிராங்குகள் குறித்த கிராமத்தில் குடியிருப்பு அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்கும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கிராம நிர்வாகிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் வெளிநாட்டினருக்கு கண்டிப்பாக சுவிஸ் நிரந்தர குடியுரிமை ஆணை இருத்தல் வேண்டும்.

குறித்த விளம்பரமானது வெளியானதும் நூற்றுக்கணக்கான நபர்கள் ஆர்வமுடன் விசாரித்துள்ளதாகவும், ஆனால் கடுமையான நிபந்தனைகளால் பலர் விலகியுள்ளதாகவும் கிராம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் தொடர்பில் எதிர்வரும் 30- ஆம் திகதி பொது வாக்கெடுப்புக்கு விடப்படும் என Albinen கிராம நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்