சுவிட்சர்லாந்தில் கடும் சிக்கலில் எய்ட்ஸ் பாதித்தவர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
481Shares
481Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளனவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களிடம் கடும் பாகுபாடு காட்டப்படுவதாக புகார் அளித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் நிலை நாளுக்கு நாள் பரிதாபமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

நடப்பாண்டில் இதுவரை எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான 118 பேர் தங்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக வருத்தமுடன் தெரிவித்துள்ளனர்.

இது கடந்த 2006 ஆம் ஆண்டு பதிவான எண்ணிக்கையை விட அதிகம் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி வேலை இடங்களிலும் துன்புறுத்தல், பணிநீக்கம் மற்றும் பாரபட்சம் தொடர்வதாகவும், குடியிருப்பு உரிமையாளர்களால் தகவல் கசியவிடப்படு துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காவல் அதிகாரிகளால் எய்ட்ஸ் குறித்த தகவல் கசியவிடப்படு, அது சிக்கலான பின்னர் காவல் துறையே குறித்த நபருக்கு வேறு பகுதியில் தங்க இடம் அமைத்து வழங்கியதும் நடந்தேறியுள்ளது.

மட்டுமின்றி சுவிஸ் சுகாதார காப்பீட்டாளர்களால் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட 2 வெளிநாட்டவர்களுக்கு உதவ முடியாது என தெரிவித்ததை அடுத்து நாட்டில் தங்கியிருக்க அனுமதி மறுக்கப்பட்டதும் நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 என உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 542 பேர் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சிபிலிஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 என இருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு இது 800 என இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்