சுவிட்சர்லாந்து தனியார் பள்ளிக்கூடம் எடுத்துள்ள முக்கிய முடிவு

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
235Shares
235Shares
ibctamil.com

ஜேர்மன் மொழியின் எளிமையாக்கப்பட்ட பதிப்பு மூலம் பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம் கடித போக்குவரத்தை நடத்த சுவிஸ் பள்ளி ஒன்று முடிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் அதிகளவில் ஜேர்மன் மொழி தான் அங்கு வசிக்கும் மக்களால் பேசப்படுகிறது.

இந்நிலையில் நகரில் இயங்கும் முதன்மை பள்ளிக்கூடம் ஒன்றிலிருந்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு, ஆசிரியர்- பெற்றோர் சந்திப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து கடிதம் அனுப்பப்படுகிறது.

இது ஜேர்மன் மொழியில் தான் அனுப்பப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து அங்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு கடினமான ஜேர்மன் மொழியில் அனுப்பப்படும் கடிதங்கள் புரிவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.

இதையடுத்து அந்தந்த பெற்றோரின் தாய் மொழியில் கடிதத்தை அனுப்ப பள்ளி நிர்வாகம் முடிவு செய்த நிலையில், இப்படி செய்தால் பின்னர் பெற்றோர்கள் ஜேர்மன் மொழியை கற்காமலே போய் விடுவார்கள் என்பதால் அது கைவிடப்பட்டது.

இது எல்லாவற்றுக்கும் மாற்றாக ஜேர்மன் மொழியின் எளிமையாக்கப்பட்ட பதிப்புகளால் பெற்றோர்களுக்கு கடிதங்கள் எழுத பள்ளி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் ஜேர்மன் மொழியை அவர்கள் எளிதாக கற்கமுடியும் என பள்ளி நிர்வாகம் நினைக்கிறது, ஆனாலும் இந்த திட்டத்துக்கு சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்