70,000 பிராங்குகளுடன் சுவிட்சர்லாந்தில் வசிக்கலாம்: பொது வாக்கெடுப்பில் வெற்றி

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

சுவிடர்லாந்தில் உள்ள கிராமம் ஒன்றில் 70,000 பிராங்குகளுடன் குடியிருக்க பொதுமக்களுக்கு நிதியுதவி செய்யும் முடிவுக்கு கிராமமக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருவது சுவிட்சர்லாந்தின் Albinen கிராமம்.

இந்த கிராமத்தில் குடியிருந்த மக்கள் சிலர் வெளியேறியதால் கிராமத்தின் எதிர்காலம் பாதிக்கும் என கருதிய கிராம நிர்வாகிகள் சில அறிவிப்புகளை வெளியிட்டனர்.

அதில் குழந்தைகளுக்கு தலா 10,000 பிராங்குகளும் பெரியவர்களுக்கு தலா 25,000 பிராங்குகள் என சராசரி 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 70,000 பிராங்குகள் நிதியுதவி வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி நிதியுதவி பெற்றுக்கொள்ள முன்வருபவர்களுக்கு சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது.

நிபந்தனைகள் வருமாறு,

  • குடும்ப தலைவரின் வயது அதிகபட்சம் 45 ஆக இருத்தல் வேண்டும்.
  • குறைந்தது பத்து வருடமாவது கிராமத்தில் வசித்திட வேண்டும்.
  • அந்த கிராமத்தில் வாங்ககூடிய இடத்தின் மதிப்பு குறைந்தது 200,000 பிராங்காக இருக்க வேண்டும்.
  • இந்த விலாசமே நிரந்தர விலாசமாக இருக்க வேண்டும்.
  • பத்து வருடத்திற்கு குறைவாக வசித்தால் 70,000 பிராங்கை திருப்பி அளிக்க வேண்டும்.
  • சுவிஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த அறிவிப்பை கேள்விப்பட்டவுடன், பலர் கிராமத்தை தொடர்பு கொண்டாலும் நிபந்தனைகளை கேட்ட பிறகு தொடர்புகொள்ளவில்லை என கிராம நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக டிசம்பர் 30-ஆம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் 100 குடியிருப்பாளர்கள் வாக்களித்த நிலையில் குறித்த திட்டத்திற்கு ஆதரவாக 71 வாக்குகள் வந்துள்ளது திருப்தி அளிப்பதாக மேயர் Beat Jost தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்