சுவிஸ் சாலையில் ஒரே நேரத்தில் 3000 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்: சூப்பரான நிகழ்வு

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சாலையில் ஒரே நேரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த 3000-க்கும் அதிகமானோர் மகிழ்ச்சியாக ஓடியது சுவாரசிய நிகழ்வாக அமைந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து இப்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டது.

இதையொட்டி சாண்டா ரன் என்னும் ஓட்டப்பந்தைய நிகழ்ச்சி பெர்ன் நகரில் நடத்தப்பட்டது. இதில் 3000-க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சாலையில் மகிழ்ச்சியாக ஓடினார்கள்.

தற்போது நகரில் மிகவும் குளிர் வானிலை இருந்து வரும் நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் எங்கும் நிற்காமல் ஓடினார்கள்.

நிகழ்ச்சியை நகர மேயர் அலெக் வான் தொடங்கி வைத்ததுடன் அவரும் பொதுமக்களுடன் ஓடினார்.

சாண்டா ரன் போட்டி மிக பெரிய வெற்றி அடைந்துள்ளதாக அலெக் கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்