முதியவருக்கு உணவளிக்க சென்ற பெண்ணை தடுத்த பொலிஸ்: காரணம் என்ன

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
388Shares
388Shares
lankasrimarket.com

சுவிஸில் பெண் ஒருவர், முதியவருக்கு உணவு அளிக்க முயன்றபோது பொலிஸார் அவரைத் தடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Vaud பகுதியில் Martha எனும் பெண், சாலையில் செல்லும்போது 60 வயது முதியவரை கண்டுள்ளார். அவருக்கு ஏதாவது உதவ வேண்டும் என நினைத்த அந்த பெண், அருகில் உள்ள கடைக்கு சென்று கேக் மற்றும் காபியை வாங்கி வந்துள்ளார்.

ஆனால், அவர் திரும்பி வந்து பார்த்தபோது பொலிசார் அந்த முதியவரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அதனைப் பொருட்படுத்தாத Martha, தான் வாங்கி வந்ததை முதியவருக்கு கொடுக்க முயன்றபோது, பொலிசாரில் ஒருவர் தடுத்துள்ளார்.

பொலிஸ் விசாரணையின்போது பொதுமக்கள் யாரும் தலையிடக் கூடாது என்று அவர் Marthaவிடம் கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து Martha கூறுகையில், ‘சாலையில் அந்த முதியவரின் நிலையை கண்டு நான் தானாக தான் உதவ நினைத்தேன். அதன்படி அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தான் கேக், காபியை வாங்கி வந்தேன்.

சுவிஸில் பிச்சையெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியும். ஆனால், நான் பணம் எதுவும் கொடுக்க முயலவில்லை. வெறும் காபி தான் கொடுக்க நினைத்தேன்.

பொலிஸார், அந்த முதியவரிடம் விசாரித்து வந்துள்ளனர் என்பது எனக்கு தெரியாது. அதனை அவர்கள் தெளிவாக கூறியிருந்தால், அவர்களிடம் வாதிடாமல் நான் சென்றிருப்பேன்.

ஆனால், அவர்கள் விசாரணையின் போது குறுக்கிடுவது தவறு என்று மட்டுமே கூறினர். அந்த முதியவருக்கு கேக், காபி கொடுக்க நினைத்தது எனது தவறுதான் என்று எண்ணிக்கொண்டு வந்துவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்