2018ம் ஆண்டு சுவிட்சர்லாந்து ஜனாதிபதியாக Alain Berset தெரிவு

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டின் 2018 -ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதியாக Alain Berset தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற 45 வயதே ஆகும் Alain Berset வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தமுள்ள 210 வாக்குகளில் 190 வாக்குகளை பெற்று, இந்த நூற்றாண்டில் மிகவும் இளம் வயதில் இந்த பொறுப்புக்கு வரும் நபர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த Alain, ”2018 ம் ஆண்டிற்கான ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது ஒரு பெரும் கௌரவம் மற்றும் பெரும் சுமை. எனது பலத்தை இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் சேவையிலும் பயன்படுத்துவேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் Alain தனது உள்துறை அமைச்சர் பொறுப்பை தொடர்ந்து கவனித்து வருவார் என்றும் 7 பேர் கொண்ட கூட்டாட்சி குழு உறுப்பினர்களின் அதிகாரத்திற்கு சமமான அதிகாரமே இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்