கர்ப்பிணி அகதியிடம் இரக்கமின்றி நடந்து கொண்ட அதிகாரி: வழங்கப்பட்ட தண்டனை

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
236Shares

கர்ப்பிணி பெண்ணுக்கு சுவிஸ் எல்லை பாதுகாப்பு அதிகாரி மருத்துவ உதவி அளிக்க மறுத்ததையடுத்து அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் குறித்த அதிகாரி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிரியாவை சேர்ந்த 36 அகதிகள் சுவிஸ் எல்லை நோக்கி கடந்த 2014 யூன் மாதம் வந்தார்கள்.

அதில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் இருந்துள்ளார். பின்னர் அகதிகள் அனைவரும் இத்தாலிக்கு, எல்லையிலிருந்து திருப்பி அனுப்பட்டனர்

அப்போது கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவ உதவி கோரியுள்ளனர்.

ஆனால் காவலில் இருந்த சுவிஸ் எல்லை பாதுகாப்பு அதிகாரி பெண்ணுக்கு மருத்துவ உதவி வழங்க மறுத்துள்ளார்.

இதையடுத்து இத்தாலிக்கு வாகனத்தில் அகதிகள் சென்று கொண்டிருந்த போது குறித்த கர்ப்பிணி பெண்ணுக்கு வயிற்று வலி அதிகமாகி ரத்த கசிவு ஏற்பட்டதோடு கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது.

இத்தாலிக்கு சென்ற பின்னரே அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் அகதிக்கு மருத்து சிகிச்சையளிக்க மறுத்த பாதுகாப்பு அதிகாரி மீது சுவிஸ் ராணுவ நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் அதிகாரியின் குற்றம் தற்போது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஆறு மாதம் நன்னடத்தையை சோதிக்கும் தண்டனையும் வழங்கபட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் அவர் தவறு செய்தால் ஆறு மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்