சுற்றுலா பயணிகள் சுவிஸில் தங்குவது திடீரென அதிகரிப்பு

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிஸின் டிக்கினோ மண்டலத்தில் இதுவரையில்லாத அளவுக்கு இரவுகளில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சதவீதம் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அங்கு அமைக்கப்பட்டுள்ள கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம் தான். இது ரயில் சுரங்கத்தடமாகும்.

17 ஆண்டுகள் கட்டுமான பணிகளுக்கு பின்னர் கடந்தாண்டு டிசம்பரில் இது தொடங்கப்பட்டதிலிருந்தே சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்தாண்டு ஜனவரியிலிருந்து அக்டோபர் வரை ஒப்பிட்டு பார்த்தால் இந்தாண்டு அதே மாதங்களுக்குள் 7.7% சுற்றுலா பயணிகள் அதிகளவில் இரவு தங்கியுள்ளதாக டிக்கினோ சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில் இது தான் மிக அதிகமாகும். 2016 அக்டோபரை விட 2017 அக்டோபரில் 16.3% சதவீதம் பேர் டிக்கினோவில் அதிகமாக இரவு தங்கியுள்ளார்கள்.

இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருக்கும் 57 கிலோ மீட்டர் நீளமுள்ள கோத்தார்டு தடத்தில் மொத்தம் 151.84 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கங்கள், சுழல்தண்டுகள், நடைவழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக உலகின் மிக நீளமான, ஆழமான ரயில் தளம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...