சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்கப்பட்ட மர்ம நபர்: விசாரணைகள் தீவிரம்

Report Print Harishan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Höngg நீர் மின் ஆலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நபர் தொடர்பில் விசாரணை முடக்கவிடப்பட்டுள்ளது.

சுவிஸின் சூரிச் பகுதியில் உள்ள லிம்மட் ஆற்றின் வழியே 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் உடல் அடித்து வரப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள Höngg நீர் மின் ஆலையத்தின் ஊழியர்கள் அந்த உடலை கைப்பற்றி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் திகதியன்று காலை 11 மணியளவில் அந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட உடலில் எந்த பெரிய காயங்களும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அவரது மரணத்துக்கான காரணம் குறித்து சரியான தகவல் இல்லாததால் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் டிசம்பர் 23- 25 திகதிகளுக்குள் நடந்த மரணங்களுக்கும் கைப்பற்றப்பட்ட உடலுக்கும் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்