எழுச்சிக் கவிஞர் செங்கதிருக்கு״இசைத்தமிழ் அரசு״ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
410Shares
410Shares
lankasrimarket.com

எழுச்சிக் கவிஞரும் எழுச்சிப்பாடகருமான ״இசைக்கலாவாரதி ״இரா செங்கதிர் ( கலைச்செல்வன்) அவர்களுக்கு ״இசைத்தமிழ் அரசு״ என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

செங்காளன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் ஆங்கிலப்புத்தாண்டு அன்று வரம் வேண்டும் என்ற தலைப்பிலான அவரது இறுவட்டு வெளியிடப்பட்டது. அந்த வேளை இந்த கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது.

டென்மார்க்கை வதிவிடமாகக் கொண்ட இரா செங்கதிர் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி மீதான பாடல், சூரிச் சிவன் மீதான பாடல் உட்பட 11 ஆலயங்கள் மீது பாடிய பாடல்களைக் கொண்டதாக இந்த இறுவட்டு அமைந்துள்ளது.

இந்த இறுவட்டு வெளியீடு கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் ஆங்கிலப்புத்தாண்டு நண்பகல் பூசையை அடுத்து இடம்பெற்றது.

ஆலயத்தலைவர் வே.கணேசகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதலில் செங்கதிருக்கு கணேசகுமார் பொன்னாடை போர்த்தி பாராட்டுப்பத்திரம் வழங்கினார்.

ஆலயத்தின் சார்பில ; தலைவர் கணேசகுமார், பொருளாளர் சதா அற்புதராஜா ஆகியோர் இணைந்து ״இசைத்தமிழ ; அரசு״ என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்கள்.

முதலாவது இறுவட்டை மூத்த ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன் அவர்கள் செங்கதிரிடமிருந்து பெற்று வெளியிட்டு வைத்தார். அதைத் தொடர்ந்து ஏனையோர் இறுவட்டைப் பெற்றுக்கொண்டனர்.

செங்கதிர் பதிலுரை வழங்குகையில், ״இந்த இறுவட்டு தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்று சுவாமிகளை வேண்டி வரம் வேண்டும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் அடுத்த தலைமுறையினருக்கு கலைத்துறையில் ஆர்வம் ஏற்பட இந்த இறுவட்டு உதவும். அவர்களை எமது கலை,கலாசாரத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்த கலைத்துறை வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளோம்.

அந்த வகுப்புகளில் இளம் தலைமுறையினர் பங்குபற்ற பெற்றோர்கள் ஊக்கமளிக்க வேண்டும்״ என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்