பெட்ரோல் பங்க்கில் திடீரென பற்றி எறிந்த கார்: சுவிஸில் பரபரப்பு

Report Print Harishan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
ibctamil.com

சுவிஸ் பெட்ரோல் பங்க்கில் கார் எறிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jura மாகாணத்தில் இசைக்கலைஞராக பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் புது வருட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடுவதற்காக காரில் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அதற்கான எரிபொருள் நிரப்புவதற்காக தனது hybrid Toyota காரில் அப்பகுதியின் பெட்ரோல் பங்கிற்க்கு சென்றுபோது, எதிர்பாராத விதமாக அவரது கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு குவிந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தும் காரில் சிக்கிய நபரை காப்பாற்ற முடியாமல் போனதாக மீட்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்