சுவிட்சர்லாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய புயல் Burglind: பனிச்சரிவுக்கு வாய்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய புயல் Burglind ஆல் பனிச்சரிவு ஆபத்து அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட புயல் Burglind ஆல் பல்வேறு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசிய புயலால் பேர்ன் மாகாணத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானர். மட்டுமின்றி விமான சேவை நிறுவங்கள் நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு விமான சேவையையும் நிறுத்தியுள்ளது.

சில மாகாணங்களில் மிக முக்கிய தேவை இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும் எனவும் பொலிசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

பல பகுதிகளில் வகனங்கள் நிலைகுலைந்து கவிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி சாலை போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல இடங்களில் புயலால் மரங்கள் வேறுடன் சாய்ந்துள்ளதாகவும் அதை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

புயலின் அச்சுறுத்தலானது இரவு மற்றும் நாளையும் நீடிக்க கூடும் என தெரிய வந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டிசினோ மாகாணத்தில் பெருமழை பெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பனிப்பொழிவு 2000 முதல் 2300 மீற்றர் அளவுக்கு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் பனிச்சரிவுக்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் உரிய எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் தரப்பு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்