சுவிற்சர்லாந்தில் பனிப்பாறைச்சரிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பு

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
108Shares
108Shares
ibctamil.com

Burglind புயலால் சுவிஸ் மலைகளில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் புயல் காற்றின் காரணமாக பனிப்பாறை சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பனி மற்றும் பனிப்பாறைச்சரிவுகள் ஆராய்ச்சி நிறுவனமான SLFஇல் பணிபுரியும் Christine Pielmeier தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் Valais மாகாணத்தில் மட்டும் ஒரு மீட்டர் உயரத்திற்கும் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் வட பகுதியில் அரை மீட்டர் உயரத்திற்கும் பனிப்பொழிந்துள்ளதாகவும், கூடுதலாக புதனன்று சுவிற்சர்லாந்தைத் தாக்கிய Burglind புயலின் காரணமாக பனி அடுக்குகள் நகர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பனிப்பொழிவின் காரணமாக 2000 மீட்டர்கள் உயரத்திற்கு பனி உயரும், இதன் காரணமாக தாழ்விடங்களில் இருக்கும் பனியுடன் அதிக மழை நீர் சேருவதால் பனியானது நகரக்கூடும்.

இதனால் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பல பகுதிகளில் பனிப்பாறைச்சரிவு ஏற்படும் மிக மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரிய பனிப்பாறைகள் நகர்ந்து பள்ளத்தாக்குகளை அடைவதால், தெரியாத இடங்களில் பனிச்சறுக்கு செய்வது மிகவும் ஆபத்தானது என்றும், இந்த அபாய நிலை வெள்ளி வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Burglind புயலால் சூரிச் விமான நிலையத்தில் சுமார் 70 விமானங்களின் புறப்பாடுகளும் வருகையும் பாதிக்கப்பட்டதும் பல ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்