புகலிடம் கோரிய 287 நபர்களை திருப்பி அனுப்பிய சுவிஸ்

Report Print Harishan in சுவிற்சர்லாந்து
831Shares
831Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் போதிய வதிவிட அனுமதி பெறாத வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் அகதிகள் 287 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு அகதிகள் தஞ்சம் அடைவதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

போதிய வதிவிட அனுமதி பெறாமல் சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ளவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

செனகன் ஒப்பந்தத்தின்படி, எந்த ஐரோப்பிய நாட்டின் எல்லைவழியே உள்நுழைந்தார்களோ, அதே நாட்டுக்கு திருப்பி அனுப்புவது வழக்கமாகும்.

இந்நிலையில் கடந்தாண்டு மட்டும் 64 தனி விமானங்கள் மூலம் 287 வெளிநாட்டவர்கள் மற்றும் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இத்தகவலை Swiss State Secretariat for Migration வெளியிட்டுள்து, கடந்த 2016-ஆம் ஆண்டில் 67 தனி விமானங்கள் மூலம் 345 அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கான அரசின் செலவாக 3.7 மில்லியன் பிராங்குகள் தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 2015-ஆம் ஆண்டில் 40,000 புகலிட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2016-ஆம் ஆண்டு 27,000 விண்ணப்பங்களாக குறந்தது, 2017-ஆம் ஆண்டிற்கான விண்ணப்ப விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்