சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
433Shares
433Shares
ibctamil.com

சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்று காலை 10.00 மணிக்கு Belinzona வில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட WTCC உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களின் அறிமுகத்துடன் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பமாகின.

முதற்கட்டமாக இன்று நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான தமது விமர்சனங்களையும், வாதங்களையும் வழக்கறிஞர்கள் முன்வைத்தனர்.

இன்றைய பூர்வாங்க விசாரணையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலுள்ள

பல்வேறு முரண்பாடுகள், முகாந்தரமில்லாத பல குற்றச்சாட்டுக்களை குற்றம் சுமத்தப்பட்ட தரப்பு வழக்குரைஞர்கள் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டவிதிகளை மீறியும், அனுமானத்தின் அடிப்படையிலும் சுமத்தப்பட்டவையாக இருப்பதை இவ் வழக்குரைஞர்கள் எடுத்துரைத்தனர்.

அத்தோடு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில வேண்டுமென்றே சோடிக்கப்பட்டவையென மேற்படி வழக்குரைஞர்கள் ஆணித்தரமாக எடுத்துரைத்தனர்.

இந்த விசாரணைகள் ஆரம்பமான இன்றைய தினம் STA சுவிஸ் தமிழர் அவையினால் “தேசத்துக்காய் உழைத்தோருக்கு உறுதுணையாய் நாமிருப்போம்” என்ற உறுதியோடு சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடம் கடந்த ஆறு மாதங்களாக சேகரிக்கப்பட்ட 5069 கையெழுத்துக்களுடன் மகஜர் ஒன்றும் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது. இவை இலத்திரனியல் குச்சியிலும் (Pen Drive) தரவேற்றப்பட்டு நீதிமன்றுக்கும், சடடத்தரணிகளுக்கும் கையளிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

இன்றைய இந்த பூர்வாங்க விசாரணைகள் தொடர்ந்து நாளையும் இடம்பெறும்.

இவ்வேளையில் இன்று நீதிமன்றுக்கு வெளியே தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமிழ்த்தேசியத்துக்கும், தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர்களின் நீதிக்காகவும் குரலெழுப்பினர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்