சுவிட்சர்லாந்தில் கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தின் Ticino மற்றும் Graubünden மாகாணங்களில் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதி முதல் ஒரு வித காய்ச்சல் பரவி வருகிறது.
பிரெஞ்ச் அதிகம் பேசப்படும் மாகாணங்களில் தற்போது பரவி வரும் காய்ச்சல், ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களிலும் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக குழந்தைகளை குறி வைத்து தாக்குவதாகவும், சராசரியாக 100,000 குழந்தைகளில் 488 குழந்தைகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளைத் தொடர்ந்து 65 வயதை கடந்த 379 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த காய்ச்சலுக்கு இதுவரை யாரும் பலியாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.