இலங்கை வந்து சுவிஸ் பெண்ணுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி

Report Print Vethu Vethu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணொருவர் பணப்பையை தவறவிட்ட நிலையில், மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபாதைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பெண் மறந்த விட்டு சென்ற பணப்பையை நல்லத்தண்ணி பொலிஸ் அதிகாரி அவரிடம் தேடி சென்று ஒப்படைத்துள்ளார்.

கரவாணா டெட்டியா என்ற பெண் சுவிட்ஸர்லாந்தில் தாதியாக செயற்படும் ஒருவராகும். அவர் கடந்த 18ஆம் திகதி தனது நண்பருடன் இரவு ஸ்ரீபாதைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று தனது பயணத்தை நிறைவு செய்தவர் வாடகை வேன் ஒன்றில் நல்லதண்ணி நகருக்கு சென்றுள்ளார். அந்த வேனில் அவர் தனது பணப்பையை மறந்து விட்டு சென்றுள்ளார். பின்னர் கொழும்பு செல்வதற்காக ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அவர் சென்றுள்ளார்.

அந்த பணப்பையில் இலங்கை நாணயத்தில் 30 ஆயிரம் ரூபாயும், கடன் அட்டையும், சாரதி அனுமதி பத்திரமும் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் பணம் எடுப்பதற்காக பணப்பையை தேடிய போது அதனை அவர் மறந்து விட்டு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. பின்னர் இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹட்டன் பொலிஸ் அதிகாரி இது தொடர்பில் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸாரிடம், பணப்பையை பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்த வேனின் சாரதி ஒப்படைத்துள்ளார்.

குறித்த பணப்பையை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மீண்டும் சுவிஸ் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த பையை மீளவும் பெற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் சுவிஸ் பெண் மற்றும் அவரது நண்பர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்