சுவிஸில் பண்ணை வீட்டில் நடந்த பயங்கர தீவிபத்து!

Report Print Thuyavan in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து zurich பகுதியில், வெள்ளிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் ஒரு பண்ணை வீட்டு கூரையில் இருந்து புகை ஊடுருவி வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மீட்புப் பணியாளர்கள் வந்தபோது, அங்குள்ள அறைகள் முழுவதும் தீயில் எரிந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் விரைவில் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

Kapo கருத்துப்படி யாரும் காயமுற்றதில்லை, கட்டிடத்தில் எந்த விலங்குகளும் இல்லை என்பது தெரியவந்தது. எரிந்து கிடந்த அறையில் சொத்து சேதம் 100, 000 பிராங்குகள் என மதிப்பிடப்படுகிறது.

canton பொலிஸ் நடத்திய விசாரணையின் மூலம், இந்த விபத்தின் காரணம் இன்னும் தெரியவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்