சுவிஸ் ரயில் நிலையங்களில் அமுலுக்கு வந்துள்ள தடை

Report Print Athavan in சுவிற்சர்லாந்து
309Shares
309Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் ஆறு ரயில் நிலையங்களில் பயணிகள் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் புகைபிடிக்க 2005 டிசம்பர் மாதம் முதலே தடை விதிக்கப்பட்டுவிட்டது.

ஆயினும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிஸ் ரயில் நிலையங்களில் அதிகம் பேர் புகை பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பது தொடர்ந்தே வருகிறது.

மேலும் பெரும்பாலான ரயில் பயணிகள் சிகெரெட் துண்டுளை புகைத்துவிட்டு ரயில் பாதையில் வீசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதை தடுக்கும் விதமாகவும் ரயில் நிலைய பாதுகாப்பு மற்றும் தூய்மையை மனதில் வைத்து சுவிஸ் ஃபெடெரல் ரயில்வேஸ் அதிரடி முடிவெடுத்துள்ளது.

இதன்படி Basel, Bellinzona, Chur, Neuchâtel, Nyon மற்றும் Zürich Stadelhofen ஆகிய ரயில் நிலையங்களில் தடை அமுலுக்கு வந்துள்ளது.

இந்த ஆறு ரயில் நிலையங்களிலும் சோதனை நடவடிக்கையாக ஒரு ஆண்டு தடை அமுலில் இருக்கும் நிலையில், அனைத்து ரயில் நிலையங்களிலும் புகைபிடிக்க தடை செய்ய சுவிஸ் ஃபெடெரல் ரயில்வேஸ் முடிவு செய்துள்ளது

ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, நெதர்லாண்ட்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் புகைபிடிக்க முழுமையான தடைகளை வைத்திருக்கின்றன.

ஜெர்மனிலும் நோர்வேவிலும் அணைத்து ரயில் நிலையங்களிலும் புகைபிடிக்க முடியாவிட்டாலும் சில ரயில் நிலையங்களில் பயணிகள் புகைபிடிப்பதை காண முடிகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்