சுவிட்சர்லாந்தை உலுக்கிய இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சாக்குப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Zezikon TG பகுதியில் போர்வையால மூடப்பட்டு சாக்குப் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் கடந்த 25 ஆம் திகதி மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த நவம்பர் 12-ஆம் திகதி காணாமல் போன இஸ்பெல்லா என்ற 20வயது பெண்ணின் உடல் என தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 36 வயது நெதர்லாந்து நாட்டவரை பொலிசார் கடந்த வியாழன் இரவு கைது செய்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெள்ளியன்றும் விசாரணை நீடித்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும் இளம்பெண் இசபெல்லா எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பான எந்த தகவலையும் பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்