உலகில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல்: எந்த நாடு முதலிடம் தெரியுமா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

உலகில் ஊழல் மற்றும் முறைகேடு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது. Tax Justice Network என்ற தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் 76 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும் 60 புள்ளிகளுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

உலகில் சட்டவிரோத பணபரிமாற்றத்திற்கான பிறப்பிடமாக உருமாறியிருக்கும் சுவிஸ், பெரும் செல்வந்தர்களின் ரகசியங்கள் இங்கு பாதுகாக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வல்லரசு நாடுகளுடன் ரகசிய பணபரிமாற்றங்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சுவிஸ், வளரும் நாடுகளில் உள்ள செல்வந்தர்களை ஊழலுக்கு ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் அந்த நாடு ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ரகசியம் காக்கும் நடவடிக்கையில் அதிக புள்ளிகளை பெற்றுள்ள நாடு கண்டிப்பாக ஊழல் மலிந்த அரசாங்கத்தை கொண்ட நாடாகவே இருக்க முடியும் எனவும் அந்த அறிக்கை சாடியுள்ளது.

secrecy score எனப்படும் புள்ளிகள் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா அதிகம் பெற்றுவருவது, அந்த நாடு கறுப்பு பணத்தை அதிகம் ஈர்த்து வருவதை வெளிச்சமிட்டு காட்டுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2013 ஆம் ஆண்டு 6-வது இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 2-வது இடத்தில் குதித்துள்ளது.

மொத்தம் 112 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் ஊழல் மிகவும் குறைவான நாடுகளாக San Marino, St. Lucia, St. Vincent and the Grenadines மற்றும் Montserrat ஆகியவை உள்ளன.

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா (42 புள்ளி), ஸ்லோவேனியா (42), பெல்ஜியம் (44), சுவீடன் (45), லித்துவேனியா (47), இத்தாலி (49), பிரேசில் (49) என உள்ளன.

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல்:

  • சுவிட்சர்லாந்த்(76)
  • அமெரிக்கா(60)
  • கேமன் தீவுகள்(72)
  • ஹாங்காங்(71)
  • சிங்கப்பூர்(67)
  • லக்சம்பர்க்(58)
  • ஜேர்மனி(59)
  • தைவான்(76)
  • ஐக்கிய அமீரகம்(84)
  • குயெர்ன்சி(72)

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்