உலகிலேயே சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து: ஏழு காரணங்கள் இதோ

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சமீபத்தில் உலகிலேயே சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள்.

இப்போது சுவிட்சர்லாந்து ஏன் சிறந்த நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாமா?

அமெரிக்க செய்தி சேனல் ஒன்றும் மேலும் சில அமைப்புகளும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து சிறந்த நாடாகத் தேர்வு செய்யப்பட்டது.

இதற்கு காரணங்களாக குறைவான வேலையில்லாத் திண்டாட்டம், பல நோபல் பரிசுகளை வென்றது மற்றும் காண்பதற்கு அருமையான இயற்கைக் காட்சிகள் என்று பல காரணங்கள் இருந்தாலும், இவையல்லாத வேறு பல (வேடிக்கையான) காரணங்களும் உள்ளன.

சுவையான உணவு

சுவிட்சர்லாந்தில் கிடைக்கும் சுவையான உணவாகிய fondue. fondue என்னும் சீஸை உருக்கி அது உருகிக் கொண்டிரும்போதே அதில் ஒரு துண்டு ரொட்டியைத் தொட்டு சாப்பிடும்போது சீஸைப்போலவே மனமும் உருகிப்போகும்.

William Tell

இன்றும் சுவிட்சர்லாந்து என்றதும் நினைவுக்கு வரும் William Tell. இவர் யார், நாட்டுக்காக இவர் என்ன செய்தார் என்று இவரைப்பற்றி என்ன தெரியாவிட்டாலும், ஒன்றே ஒன்று எல்லாருக்கும் நினைவிருக்கும். அது தனது மகனின் தலையில் ஒரு ஆப்பிளை வைத்து, சரியாக அதை அம்பினால் இரண்டு துண்டாக்கினவர் என்பதுதான்.

சிறந்த ராணுவம்

சுவிட்சர்லாந்தின் சிறந்த ராணுவம். சுவிட்சர்லாந்து ராணுவம் பெரும்பாலும் மற்ற நாடுகளுடன் போருக்குச் செல்வதில்லை. சொல்லப்போனால் சர்வதேச peacekeeping missionகளில் கூட பங்கேற்கிறது. ஏதோ தெரியாமல் சில நேரங்களில் அது Lichtenstein நாட்டிற்குள் நுழைந்துவிடுவதுண்டு. ஒரு முறை இவ்வாறு நுழைந்ததற்கு காரணம் கேட்டபோது இருட்டில் கண் தெரியாமல் நுழைந்ததாக ராணுவம் காரணம் கூறியது. அப்புறம் ஒரு முறை தவறாக விட்ட ராக்கெட்டுகளால் காட்டுத்தீ ஏற்பட்டதும் அதனால் பலத்த பின் விளைவுகளை சந்திக்க நேரிட்டதும் இன்னொரு நீண்ட கதை.

அழகான ராணுவ கோட்டை

உலகின் அழகான ராணுவக் கோட்டைகளைக் கொண்ட ஒரு நாடு சுவிட்சர்லாந்து. The Villa Rose என்று அழைக்கப்படும் ராணுவக் கோட்டைகளில் ஒன்று வெளியே இருந்து பார்ப்பதற்கு அழகான வீடு போல் தோற்றமளித்தாலும், அதன் பின்னேடாங்குகளைத் தாக்கும் பீரங்கிகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் வைக்கப்பட்டிருந்தன. (இப்போது அது ஒரு மியூசியமாக உள்ளது).

லொக்கேஷன்களுக்கு பெஸ்ட்

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எடுப்பதற்கு ஏற்ற இடம். ஒரு பக்கம் கருப்புப் பணத்தைப் பதுக்க உதவும் நாடு என்ற கெட்ட பெயரை பெற்றிருந்தாலும், இன்னொரு பக்கம் துப்பறியும் படங்கள் எடுப்பதற்கு ஏற்ற லொக்கேஷன்களைக் கொண்ட சிறந்த நாடு எனலாம்.

சிறந்த அரசியலமைப்பு

சுவிட்சர்லாந்தின் அரசியலமைப்பு வித்தியாசமான ஒன்று. அங்கு ஒரு அதிபர் இருந்தாலும் நாட்டை நிர்வகிப்பது, ஏழு உறுப்பினர்களைக் கொண்ட Federal Council. ஒவ்வொரு வருடம் இவர்களில் ஒவ்வொரு உறுப்பினர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படி இருந்தாலும் ஏழு பேருக்கும் ஒரே அதிகாரம்தான். அதாவது ஏதாவது தவறு நடந்தால் ஏழு பேரும் பதில் சொல்லவேண்டும்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இது போல் இன்னொரு நாட்டில் நடக்குமா? அமெரிக்காவில் Donald Trump, Bill Clinton, Barack Obama, George Bush மற்றும் Jimmy Carterஐ ஒரே மேடையில் அதிபர்களாக கற்பனை செய்து பார்க்க முடியுமா?

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்