சுவிட்சர்லாந்தில் அப்ரிடியின் செயலால் வைரலாகும் வீடியோ

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
367Shares
367Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி இந்திய தேசிய கொடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் மோரிட்ஸ் ஐஸ்கட்டி மைதானத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி இரண்டு ஆட்டங்களிலும் ஷேவாக் தலைமையிலான டையமன்ட்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது.

வெற்றிக்கு பிறகு அப்ரிடி, அங்கு குழுமியிருந்த ரசிகர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது இளம் வயது இந்திய ரசிகை ஒருவரும் அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பினார்.

அந்த ரசிகை தனது கையில் இந்திய தேசிய கொடி ஒன்றை வைத்திருந்தார். இதை கவனித்த அப்ரிடி அதை விரித்து பிடிக்க சொல்லி, அதன் பிறகு அந்த ரசிகையுடன் அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டவரான அப்ரிடி, இந்திய தேசிய கொடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரது செயலால் நெகிழ்ந்து போன இந்திய ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்