ரஷ்ய விமான விபத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் பலி

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
125Shares
125Shares
lankasrimarket.com

ரஷ்யாவில் 71 பேர் பலியான விமான விபத்தில் சுவிட்சர்லாந்து பிரஜையும் ஒருவர் என தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் டோமோடேடோவா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட, அண்டோனோவ் அன் - 148 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணம் செய்த 71 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த விமான விபத்தில் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுவிஸின் வெளியுறவுத்துறை அமைச்சகம், ரஷ்யா அதிகாரிகளிடம் விசாரித்ததில், சுவிஸ் நபர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், தற்போதைய சூழலில் அவர் குறித்து மற்ற தகவல்களை அளிக்க ரஷ்ய அதிகாரிகள் மறுத்து விட்டதாக சுவிஸ் வெளியுறத்துறை தெரிவித்துள்ளது.

எனினும், சுவிஸைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று, விமான விபத்தில் இறந்த நபர், Schaffausen நகரைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளது.

மேலும் விபத்தில் பலியான நபர் Schaffhausen மாகாணத்தை சேர்ந்தவர் என்றும், 46 வயதிருக்கலாம் எனவும் சுவிஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்