தென்கொரியாவில் எஸ்கேலட்டரில் தொங்கிய படி சென்ற சுவிட்சர்லாந்து வீரர்

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

தென்கொரியாவில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற சுவிட்சர்லாந்து வீரர் எஸ்கேலட்டரில் நின்று செல்லாமல் கைகளை பிடித்து தொங்கிய படி சென்றுள்ளார்.

தென் கொரியாவில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி PyeongChang-கில் நடைபெற்று வருகிறது.

இதில் நான்காம் நாள் முடிவில் ஜேர்மனி 4 தங்கம், 2 வெண்கலத்துடன் மொத்தம் 6 பதக்கங்கங்கள் பெற்று முதலிடத்திலும் நெதர்லாந்து 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலத்துடன் 2-வது இடத்திலும், கனடா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் தென்கொரியா சென்ற சுவிட்சார்லாந்து வீரர்கள் ஓய்வு நேரத்தில் செய்த குறும்புத்தனமாக வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் பிரி ஸ்டைல் வீரரான Fabian Bösch(20) அங்கிருக்கும் எஸ்கேலட்டரில் நின்று செல்லாமல், எஸ்கேலட்டரின் சைடில் இருக்கும் பிடியை பிடித்து தொங்கிய படியே சென்று, இறுதியில் ஏறிச் செல்கிறார்.

அதே போன்று ஒலிம்பிக் ரிங்கின் மீது நிற்பது போன்ற புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்