சுவிற்சர்லாந்தில் இடம் பெற்ற பெரியகல்லாறு ஒன்றிய நிகழ்வுகள்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
156Shares
156Shares
lankasrimarket.com

சுவிஸ் பெரியகல்லாறு ஒன்றியதலைவர் கண்ணப்பன் நிவேதிதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடந்தது.

நிகழ்வின் போது, தலைவர் கலாநிதி பொன் சுரேஸ் அவர்கட்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

தொடர்ந்து ஒன்றிய தலைவர், கலாநிதி பொன் சுரேஸ் ஆகியோர் விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்தவுடன், நிகழ்வுகளை ஒன்றிய செயலாளர் இரா. முரளிதாசன் மிக நேர்தியாக தொகுத்து வழங்கினார்.

தலைவர் தனது உரையில் பெரியகல்லாறு மத்தியகல்லூரியின் அவசர தேவையான விளையாட்டு மைதான திருத்தத்துக்கான உதவி கோரியபோது உடனடியாக த.யேசுதாசன்(மோகன்) அதற்கான முழுநிதியையும் வழங்கி ஊர்பற்றையும் வள்ளல் குணத்தையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். செயலாளர் தனதுரையில் ஊரின்பல தேவைகளை அன்புகோரிக்கையாக முன்வைத்தார்.

அடுத்து ஒன்றிய மூத்த ஆலோசகர் அனைவராலும் அங்கிள் என்று அழைக்கின்ற திரு. சின்னராசா தனது சிறப்பு உரையில் பல தசாப்தங்கழுக்கு முந்திய பெரிய கல்லாற்றைசேர்ந்த கல்விமான்களின் பெயர்களை சொல்லி அவர்களது திறமைகளையும் சொன்னார்.

அந்தவகையில் கலாநிதி பொன் சுரேஸ்அவர்கள் பெரியகல்லாற்றிற்கு கிடைத்தபொக்கிஷம் எனவும் ஏன் தமிழருக்கு கிடைத்த பெருமை எனவும் வாழ்த்தினார்.

இறுதியாக கலாநிதி பொன்சுரேஸ்அவர்கள் தனது உரையில் தன்னால் முடிந்தவரை அனைத்து தேவைகளையும் செய்வதாகவும், ஊரின் கல்வி வளர்சியில் சுவிஸ் பெரியகல்லாறு ஒன்றியம் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இங்குள்ள அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்று கேட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக நடைபெற்ற கலைநிகழ்வில் கலாநிதி பொன்சுரேஸ் அவர்கள் தனது காந்த குரலால் பாடல்கள் பாடி ஆச்சரியபடுத்தினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்