ஸ்மார்ட்போனின் பிடியில் சிக்கியுள்ள சுவிட்சர்லாந்து: ஆய்வு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
246Shares
246Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் நால்வரில் ஒருவர் எப்போதும் இணையத்திலேயே இருப்பதாக சமீபத்தில் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி மற்றும் ரேடியோவின் இடத்தை இப்போது ஸ்மார்ட்போன் பிடித்துவிட்டது. அதாவது இப்போது அனைத்து விடயங்களும் மக்களின் விரல் நுனியிலேயே இருக்கின்றன என்றே கூறலாம்.

நண்பர்களும் சகாக்களும் சமூக ஊடகங்களில் இடும் செய்திகளைப் பார்ப்பது ஒரு கட்டாயக் கடமை போலவே ஆகிவிட்டது.

இந்நிலையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் 1049 பேரிடம் Comparis.ch ஆய்வொன்றை நடத்தியது.

அதில், நால்வரில் ஒருவர் எப்போதும் இணையத்திலேயே மூழ்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இளைய வயதினர்தான் ஸ்மார்ட்போனை காதலரைப்போல் நடத்துகிறார்கள் என்றால், 24 மணி நேரமும் இணையத்திலேயே மூழ்கிக் கிடப்பவர்களில் 36 சதவிகிதம்பேர் 56 வயதுக்கு மேற்பட்டவர்களாம்.

எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் அவ்வப்போது இணையத்திலிருந்து வெளிவருபவர்கள்கூட இணையத்தில் பதிவிடப்படும் எதையும் ஒன்று விடாமல் படித்து விடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

comparis.chஇன் ஆய்வின்படி, 18 முதல் 35 வயதுடையவர்களில் ஸ்மார்ட் போனுடனேயே வாழ்க்கை நடத்துபவர்களும் அதே 36 சதவிகிதம்பேர். ஆகவே இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இந்த ஒரு விடயத்தில் ஒரு வித்தியாசமும் இல்லை எனலாம்.

இதுகுறித்து Digital expertஆக இருக்கும் Jean-Claude Frick கூறுகையில், ஸ்மார்ட் போனுக்கு வரும் தேவையற்ற அனைத்து மின்னஞ்சல்களையும் பார்ப்பதே பலரை முழு நேரமும் போனிலேயே மூழ்கி இருக்கச் செய்கிறது.

அவற்றை அணைத்து வைப்பதே போனின் addictionஇலிருந்து விடுபட உதவும் முதல் படியாக இருக்கும் என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்