இது ரொம்ப ஓவர்: ரயில் நிலையத்தில் புகைப்பிடிக்க தடைக்கு அரசியல்வாதியின் ரியாக்‌ஷன்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
133Shares
133Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து ரயில் நிலையங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதை எதிர்த்து அரசியல்வாதி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Green-Liberal கட்சியைச் சேர்ந்த Dietrich Weidmann என்னும் அரசியல்வாதி Zurich, Basel மற்றும் Nyon ரயில் நிலையங்களில் புகைபிடிக்க ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளதை எதிர்த்து Zurich மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த தடை அர்த்தமற்றது என்று தெரிவித்துள்ள அவர், இது குடிமக்களின் தனியுரிமையை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் புகை பிடிப்பதை தடுக்கும் உரிமை ரயில்வே நிர்வாகத்துக்கு இல்லை, அது தனது வேலையை மட்டும் பார்க்கட்டும், ஒரு health guruவாக ஆக முயற்சிக்க வேண்டாம் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

ஒரு மூடிய அறைக்குள் புகை பிடிப்பது மற்றவர்களின் உடல் நலத்திற்கு தீங்கானது என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் வெளியிடங்களில் புகைப்பதை தடை செய்வதெல்லாம் ரொம்ப ஓவர் என்று அவர் கூறினார்.

தற்போது ஆறு ரயில் நிலையங்களில் மட்டும் புகை பிடிக்க வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இனி அது அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல் படுத்தப்படலாம்.

ரயிலிலும் ரயில் நிலையத்திலுள்ள கட்டிடங்களிலும் புகை பிடிப்பது 2005ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.

வழக்கு தொடர்ந்துள்ள Dietrich Weidmann புகை பிடிக்கும் பழக்கமில்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்