அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வங்கிகள்: அதிர்ச்சித் தகவல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
125Shares
125Shares
lankasrimarket.com

சுவிஸ் வங்கிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட வங்கிகள் கடந்த ஆண்டு அரை டிரில்லியன் டொலர்களை அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Don’t Bank on the Bomb என்னும் அமைப்பின் 2018ஆம் ஆண்டின் அறிக்கை 329 வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் உட்பட 24 நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள், 525 பில்லியன் டொலர்களை பிரான்ஸ், இந்தியா, நெதர்லாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலுள்ள 20 பெரிய அணு ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கிறது.

அழிவை நோக்கிய அணு ஆயுத பந்தயம் ஒன்று தொடங்கியுள்ள அதே நேரத்தில் அழிவை வைத்து பணம் சம்பாதிக்கப்பார்ப்பவர்களின் பந்தயம் ஒன்றும் தொடங்கியுள்ளது என்று கடந்த ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற Genevaவை மையமாகக் கொண்ட பிரச்சார அமைப்பான International Campaign to Abolish Nuclear Weapons (ICAN)இன் தலைவரான Beatrice Fihn கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் 2014 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஏழாக இருந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஒன்றாகக் குறைந்துள்ளது, அந்த ஒரே நிறுவனம் Credit Suisse வங்கி.

Swiss War Materials Act சட்டத்திற்கு ஒப்பான அணு ஆயுதங்கள் மீதான பொதுக் கொள்கைகளைக் கொண்டுள்ள Credit Suisse வங்கியை Don’t Bank on the Bomb அமைப்பின் நிறுவனர்கள் பாராட்டியுள்ளனர்.

Credit Suisse வங்கி ”அணு ஆயுதம், உயிரி ஆயுதம் மற்றும் வேதி ஆயுதங்களையும், கண்ணி வெடிகள், cluster munitions என்னும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்பவர்களுக்கோ, வைத்திருப்பவர்களுக்கோ நேரடியாக நிதி உதவி செய்வதில்லை என்னும் கொள்கையைக் கொண்டுள்ளது.

இருப்பினும் Credit Suisse வங்கியானது மொத்தத்தில் அணு ஆயுத உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதையே தவிர்க்கும் வகையில் தனது கொள்கையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று Don’t Bank on the Bomb அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்