ஊடுருவும் போலி இமெயில்கள்: சுவிஸ் மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
231Shares
231Shares
lankasrimarket.com

சுவிஸ் பொலிசார் அனுப்புவது போன்ற இமெயில்கள் மக்களுக்கு வரும் பட்சத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Zurich, Thurgau, Sankt Gallen மற்றும் Basel மண்டலங்களில் தான் இது போன்ற போலி இமெயில்கள் அதிகம் வலம் வருகிறது.

மண்டல பொலிசாரிடமிருந்து இமெயில் அனுப்பட்டுள்ளது போலவும், முக்கிய தகவல்கள் தேவை எனவும் அதில் குறிப்பிடப்படும்.

இதுபோன்ற இமெயில்களில் ஆபத்தை விளைவிக்கும் விடயங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.

பொலிசாரிடமிருந்து இமெயிலை எதிர்ப்பார்பவர்கள் மட்டும் அதை திறக்கலாம் எனவும், மற்றவர்கள் இதுபோன்ற இமெயிலை அழித்துவிடலாம் அல்லது திறக்க வேண்டாம் எனவும் காவல் துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்