புகலிடம் கோரும் இம்மாதிரியான பெண்களை நிராகரிக்க வேண்டாம்: சுவிசுக்கு கோரிக்கை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
572Shares
572Shares
lankasrimarket.com

தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும்முன் அல்லது வெளியேறும்போது பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களை நிராகரிக்கவேண்டாம் என்று “Appel d’elles” என்னும் அமைப்பு சுவிட்சர்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களை முறையாக நடத்தக் கோரும் 8000 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பெண்களின் வாழ்வில் நிகழ்ந்த கோர நிகழ்வுகளை புறக்கணிப்பதை அவமதிப்பாக தாங்கள் கருதுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தகையோரின் புகலிடக் கோரிக்கைகளை மறுத்து டப்ளின் ஒப்பந்தத்தின்படி அவர்களை இன்னொரு நாட்டுக்கு அனுப்புவது அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களது பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்கிறார்கள் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்.

பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரை வெளியேற்றுவது சித்திரவதை மற்றும் மனிதத் தன்மையற்று அல்லது மரியாதைக்குறைவாக நடத்துவதையும் தண்டிப்பதையும் தடை செய்யும் European Convention on Human Rightsஇன் 3ஆவது பிரிவுடன் முரண்படக்கூடியது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமையன்று அரசிடம் தங்கள் மனுவை அளித்த பின்பு அந்த அமைப்பினர் நீதித்துறை அமைச்சர் Simonetta Sommarugaவின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாடல் ஒன்றையும் பாடினர். அவரிடம்தான் இந்தப் பிரச்சினையைப் பற்றி அவர்கள் விவாதிக்க விரும்புகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்