போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமுள்ள ஐந்து சுவிஸ் நகரங்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஐரோப்பாவில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமுள்ள நகரங்களில் சுவிஸ் நகரங்கள் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.

Zurich, Basel, Bern, St-Gallen மற்றும் Geneva ஆகிய ஐந்து சுவிஸ் நகரங்கள் ஐரோப்பாவில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

19 ஐரோப்பிய நாடுகளிலுள்ள 56 நகரங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட wastewater analysis study என்னும் கழிவு நீரில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தினமும் மறுசுழற்சி நிலையங்களுக்கு செல்லும் கழிவு நீரை ஒரு வாரத்திற்கு ஆய்வு செய்து 43 மில்லியன் மக்களுடைய பயன்பாட்டின் காரணமாக வெளியான கழிவு நீரில் போதைப்பொருட்கள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்பட்டது.

European Monitoring Centre for Drugs and Drugs addiction (Emcdda) என்னும் அமைப்பு வெளியிட்ட பரிசோதனை முடிவுகளில் ஐந்து சுவிஸ் நகரங்களில் அதிக அளவில் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.

போதைப்பொருள் உபயோகிப்பதில் முதலிடத்தைப் பிடித்த Barcelonaவைத் தொடர்ந்து Zurich இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

St Gallen நான்காவது இடத்திலும், Geneva ஐந்தாவது இடத்திலும், Basel எட்டாவது இடத்திலும் Bern ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.

போதைப்பொருளின் பயன்பாடு மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவில் அதிகம் காணப்படுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போதைப்பொருள் பயன்பாடு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

பெரும்பாலான நகரங்களில் வார இறுதி நாட்களில் சில குறிப்பிட்ட போதைப்பொருளின் அளவு கழிவு நீரில் அதிகம் காணப்பட்டது. வேறு சில போதைப்பொருட்கள் எல்லா நாட்களிலுமே காணப்பட்டன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers