செவ்வாய் கிரகத்திற்காக உயர் தொழில்நுட்ப கமெராவை உருவாக்கியுள்ள சுவிஸ் விஞ்ஞானிகள்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
152Shares
152Shares
lankasrimarket.com

சுவிஸில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப உள்ள உயர் தொழில்நுட்ப கமெராவை சோதனை செய்யும் பணியில், அந்நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க தொழில் அதிபர் எலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய் கிரகத்தின் அமைப்பு மற்றும் வாழ்வதற்கு ஏற்ற சூழல் முதலியவற்றை அறிந்து கொள்ள, சுவிஸ் விஞ்ஞானிகள் உயர் தொழில்நுட்பத்தில் கமெராவை உருவாக்கியுள்ளனர்.

Close-Up Imager' எனும் இந்த கமெராவை, சோதனை செய்ய பிரதி எடுக்கும் Rover ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இது 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும்.

அத்துடன் செவ்வாயில் உள்ள சூழ்நிலையை கண்டறிய, பாறைகளால் ஆன தோட்டம் ஒன்றையும் உருவகப்படுத்தியுள்ளனர். இது குறித்து Basel பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகையில்,

‘Mars Rover எவ்வாறு ஒரு விண்கல் மீது பயணிக்கும் என்பதை ஆராய, இந்த சோதனையை செய்து வருகிறோம். மேலும், எங்களது கமெரா என்ன நிலையில் இருக்க வேண்டும் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு சூரியனின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும், என்பது குறித்தும் சோதனை செய்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து CLUPI கமெராவை உருவாக்கிய Jean-Luc Josset கூறுகையில், ‘வாய்ப்புகள் சிறியவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், நாங்கள் முயற்சி செய்ய ஒரு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்