சுவிட்சர்லாந்தில் பெருகும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 5 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 2016 ஐ விட 2017 ஆம் ஆண்டில் 13 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

அதேபோல் 2000 ஆம் ஆண்டு முதல் தனிநபர் சொத்து 130 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

The KnightFrank 2018 Wealth Report என்னும் அறிக்கையின்படி 2017 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் 52,950 கோடீஸ்வரர்கள் இருந்தார்கள்.

2016 இல் இந்த எண்ணிக்கை 47,000 ஆக இருந்தது. 2022 வாக்கில் இந்த எண்ணிக்கை 64,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதிலும் சுமார் 2.5 மில்லியன் கோடீஸ்வரர்கள் இருப்பதாகக்கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ரஷ்யக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது.

ஆண்டொன்றிற்கு 50 மில்லியன் டொலர்கள் சம்பாதிக்கும் சுவிஸ் குடிமக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் அதாவது 3,710 பேராக உயர்ந்துள்ளது. மேலும்

சுவிட்சர்லாந்தில் 250 பேர் ஆண்டொன்றிற்கு 500 மில்லியன் டொலர்கள் சம்பாதிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் இத்தகைய கோடீஸ்வரர்கள் 6,900 பேர் இருக்கிறார்கள். இதிலும் ரஷ்யர்கள் மற்றும் அவர்களது அண்டை நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உயர்ந்துள்ளது.

German-language business magazine Bilanzஇன் 2017 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி சுவிஸ் நாட்டவர்களாகிய 300 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 674 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்