1 1/2 வயது மகனுடன் சாகசம்: வைரலாகும் தந்தையின் செயல்

Report Print Harishan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பிரபல பனிச்சறுக்கு வீரர் நிக்கோலஸ் தன் ஒன்றரை வயது மகனுடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சுவிஸின் பிரபல பனிச்சறுக்கு வீரரான நிக்கோலஸ் ஃபால்கெட்டுக்கு புது புது சாதனைகள் படைப்பதில் எப்போது தனி ஆர்வம் உண்டு.

அந்த வகையில் கடந்த 2015 ஏப்ரலில் Marécottes பனிமலை பகுதியில் அவர் நிகழ்த்திய சாகச வீடியோ உலகம் முழுவதிலும் வைரலாகி இருந்தது. தற்போது வரை அந்த வீடியோவை 3 மில்லியன் நபர்கள் கண்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது தன் 17 மாத மகனுடன் பனிச்சறுக்கு விளையாட்டில் அவர் ஈடுபட்டுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிக்கோலஸ், மேக்ஸ் வெளியில் செல்லலாம் என கூறினான், நான் அவன் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஒரு அதிசயத்தை நிகழ்த்த வேண்டும் என விரும்பினேன், அதன் வெளிப்பாடு தான் இது, எதிர்மறை கருத்துகள் வந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன்” என கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்