சுவிட்சர்லாந்தில் அசத்தும் புலம்பெயர்ந்த மாணவர்கள்: ஆய்வில் தகவல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பாரீஸில் அமைந்துள்ள Organisation for Economic Cooperation and Development (OECD) என்னும் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து பள்ளிகளில் பயிலும் புலம்பெயர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதாகத் தெரியவந்துள்ளது.

திங்களன்று வெளியான அந்த ஆய்வு குறிப்பாக புலம்பெயர்ந்த மாணவர்களின் கல்வித்தரம் குறித்த முந்தைய புள்ளி விவரங்களையும் தற்போதைய புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு நோக்கியது.

புலம்பெயர்ந்த மாணவர்கள் நன்றாகவே படிப்பதாகவும் அதிலும் 58%பேர் வாசித்தல், கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மாணவர்கள் உற்சாகமாகக் கற்கிறார்களா, மற்றும் பள்ளிச் சூழல் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 46%பேர் நேர்மறையான பதிலளித்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஐரோப்பிய மாணவர்களின் எண்ணிக்கையுடன் (66%)ஒப்பிடும்போது குறைவுதான் என்றாலும், சுவிட்சர்லாந்தில் பிறந்த மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகமாகும்.

ஆனால் சுவிட்சர்லாந்தில் பிறந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த மாணவர்கள் இருவரின் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது உலகிலேயே சுவிட்சர்லாந்து மாணவர்கள்தான் கல்வியில் உற்சாகமாகப் பங்குபெறும் மாணவர்களாகிறார்கள்.

ஆனால் சுவிட்சர்லாந்தை சொந்த நாடுபோல் உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு 54%வெளிநாட்டு மாணவர்கள்தான் ஆம் என்று பதிலளித்துள்ளனர்.

பத்தாண்டுகளுக்குமுன் இதே கேள்வி கேட்கப்பட்டபோது, ஆம் என்று பதிலளித்தவர்களை விட இந்த எண்ணிக்கை 17 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...