புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாகும் சுவிட்சர்லாந்தின் 200 ப்ராங்க் கரன்சி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் புதிய 200 ப்ராங்க் நோட்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் திகதி வெளியாக இருப்பதாகவும் ஒரு வாரம் சென்றபின் அது புழக்கத்தில் விடப்பட இருப்பதாகவும் Swiss National Bank நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குமுன் வெளியிடப்பட்ட புதிய 10, 20 மற்றும் 50 ப்ராங்க் நோட்டுகளுடன் சேர்ந்து கொள்ளவிருக்கும் 200 ஃப்ராங்க் நோட்டின் இறுதி வடிவம் இன்னும் முழுமை பெறவில்லை.

புத்தம்புது மெருகுடன் வெளிவரும் ஒவ்வொரு நோட்டும் சுவிட்சர்லாந்தின் ஒரு குணாதிசயத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஒரு கை மற்றும் உலக உருண்டை வடிவங்களுடனும் பல்வேறு கிராபிக் அம்சங்களுடனும் அமைந்திருக்கின்றன.

அந்த வரிசையில் 200 ப்ராங்க் நோட்டு சுவிட்சர்லாந்தின் தொழில்நுட்பம் என்னும் அம்சத்தைக் காட்டும் வகையில் அமைந்திருக்கும்.

1,000 மற்றும் 100 ப்ராங்க் நோட்டுகள் 2019ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நோட்டுகள், மைக்ரோஸ்கோப் அல்லது UV ஒளியின் மூலம் மட்டுமே பார்க்கும் வகையில் அமைந்துள்ள, கள்ள நோட்டுகளை தயாரிக்க இயலாத வகையிலான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.

1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மற்ற நோட்டுகள் அறிவிப்பு வரும் வரையில் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்