ஜெனிவா ரயில் நிலையத்தில் இசைக்கருவியை வாசித்த பொலிஸ்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
99Shares
99Shares
lankasrimarket.com

ஜெனிவாவின் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து காவலர் ஒருவர் பியானோ இசைக்கருவியை வாசித்த வீடியோ வைரலாகியுள்ளது.

கார் எமிரி என்ற பொலிஸ் அதிகாரி பணி சீருடையில் இருந்த நிலையில் இசைக்கருவியை வாசித்துள்ளார்.

இது சம்மந்தமான வீடியோவை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை 90,000 க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

யூடியூப்பில் குறித்த வீடியோ எட்டாவது இடத்தில் டிரண்டாகியது.

அந்த வீடியோவில் எமிரி பியானோ வாசித்த நிலையில் ரயில் நிலையத்தில் இருந்த பலர் அதை கண்டுகொள்ளவில்லை.

ஆனாலும் அவர் வாசித்து முடித்த இறுதியில் கைத்தட்டி அங்கிருந்தவர்கள் பாராட்டினார்கள்.

இந்நிகழ்வு நடந்த ஜெனிவாவின் கொர்னாவின் ரயில் நிலையத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டிய பெரும் கடமை எமிரிக்கு உள்ளது.

ஆனால் சிறிய புத்துணர்ச்சிக்காக எமிரி பியானோவை வாசித்துள்ளார்.

குறித்த வீடியோ உலகளவில் வைரலாகும் என தான் நினைக்கவில்லை என எமிரி கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்