விடுதலை புலி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு! சுவிஸில் வரலாற்று சாதனை

Report Print Vethu Vethu in சுவிற்சர்லாந்து

சுவிஸ் வரலாற்றில் 13 விடுதலை புலி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு, கின்னஸ் சாதனை படைத்த வழக்காக காணப்படுவதாக சிங்கள ஊடகமான திவயின தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கினை விசாரிப்பதற்காக 4 மில்லியன் சுவிஸ் பிராங் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் தலைமைக்கு 15 மில்லியன் டொலர் பணம் வழங்கியமை தொடர்பில் 13 புலி உறுப்பினர்களுக்கு எதிராக 4000 பக்கங்களை கொண்ட வழக்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த பணம் பிரபல கிரெடிட் சுவிஸ் வங்கியில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வழக்கின் பிரதான சந்தேக நபர் அப்துல்லா ஜெயபாலன் என்பவர் சுவிஸ் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவராக செயற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஜெயபாலன் சுவிஸ் உணவகம் ஒன்றில் சேவை செய்யும் சமையல்காரர் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers